Latest Current Affairs in Tamil

நடப்பு நிகழ்வுகள் வினாக்கள் / விடைகள்
======================================

.
01) சமீபத்தில் புதிதாக பதவியேற்றுள்ள கனடா நாட்டு அமைச்சரவையில் இந்திய வம்சாவளியினர் எத்தனைபேர் இடம்பெற்றுள்ளனர்?

02) தங்கள் நாட்டில் உற்பத்திசெய்யப்படும் குருடாயிலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு 40 ஆண்டுகளுக்கு பின் அனுமதி அளித்துள்ள நாடு எது ?

03) ஒடிஷா மாநில மதிய உணவுத்திட்டத்தில் பங்குபெறுவதற்கு அட்சய பாத்திர பவுண்டேசன் அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் எது ?

04) இந்தியாவில் முதன்முறையாக display variant debit card அறிமுகம் செய்த வங்கி எது ?

05) நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி 2014 – 15ம் ஆண்டில் சிறப்பான பொருளாதார வளர்ச்சியை அடைந்த மாநிலம் எது?

06) I – LTEO என்றால் என்ன ? இது எதனைப்பற்றியது ? இதனை துவக்கியது எந்த துறை ?

07) உலக வங்கியின் zero routine flaring by 2030 initiativeல் இணைந்துள்ள இந்திய நிறுவனம் எது ?

08) ஆப்கானிஸ்தான் நாட்டு கிரிக்கெட் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள இந்தியர் யார் ?

09) டெல்லி மாநில மகளிர் ஆணைய தலைவர் / தலைவி யார் ?

10) சுமார் 40 ஆண்டுகளுக்கு பின் மும்பையில் தனது துணை தூதரக அலுவலகத்தை துவக்கிய நாடு எது ?

11) மத்திய சாலைவழிப் போக்குவரத்து துறை அமைச்சகத்துடன் இணைந்து சாலை விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கிய கார் உற்பத்தி நிறுவனம் எது? விழிப்புணர்வு பிரச்சாரத்தின் பெயர் என்ன ?

12) சமீபத்தில் இந்தியாவில் தனியார் வங்கிச் சேவை பிரிவின் மூலம் வழங்கிவந்த வெல்த் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட சேவைகளை நிறுத்தம் செய்வதாக அறிவிப்பு வெளியிட்டுள்ள இரண்டு வெளிநாட்டு வங்கிகள் எது?

13) சென்னையின் பெருவெள்ள பாதிப்பின் போது பயணிகள் விமான தளமாக பயன்படுத்தப்பட்ட ராணுவ விமான தளத்தின் பெயர் என்ன?

14) சமீபத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் எந்த நகரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்?

15) சமீபத்தில் பங்களாதேஷ்க்கு corvette வகை போர் கப்பல்களை வழங்கிய நாடு எது?

16) டிசம்பர் 19ல் மாநிலம் முழுமைக்கும் பாலித்தீன் பைகளை உபயோகிக்க தடை விதித்த மாநில அரசு எது?

17) சமீபத்தில் புதிதாக ஐந்து மாவட்டங்களை உருவாக்குவதற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ள மாநிலம் எது ?

18) 2016ம் ஆண்டு குடியரசு தின விழா சிறப்பு விருந்தினர் யார் ?

19) டெல்லி மாநில லோக்ஆயுக்தா நீதிபதியாக பதவியேற்றுள்ளவர் யார் ?

20) தலைமை தகவல் ஆணையராக நியமனம் செய்ப்பட்டுள்ளவர்?

21) தூய்மை இந்தியா திட்டத்திற்கு உலக வங்கி கடனாக வழங்க ஒப்புக்கொண்ட தொகை எவ்வளவு ?

22) முதலாவது உ.பி. ரத்னா விருது பெற்றவர் யார் ?

23) சமீபத்தில் Hundred drums Wangala திருவிழா எந்த மாநிலத்தில் கொண்டாடப்பட்டது ?

24) Lasoong திருவிழா எந்த மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது ?

25) சமீபத்தில் one rank , one pension திட்டம் பற்றி ஆராய அமைக்கப்பட்ட கமிசன் எது ?

26) இந்தியாவில் தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு எங்கு துவங்கப்பட்டுள்ளது ?

27) கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்படவிழாவில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி வெளியிட்ட புத்தகம் எது ?

28) சமீபத்தில் Freedom of the City Award விருது பெற்றவர் ( இந்திய வம்சாவளி ) யார்? எந்த நகர்?

29) உலக வர்த்தக அமைப்பின் ( WTO) டைரக்டர் ஜெனெரல் யார் ?
.

.
விடைகள்
##########

.
01) 4 பேர் …. ( 19 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு பெற்றுள்ளனர் )

02) அமெரிக்கா

03) ஐடியா செல்லுலர் நிறுவனம்

04) ஆக்சிஸ் வங்கி

05) பீகார்

06) Indian Long Term Ecological Observatories ( I – LTEO ) நீண்டகால சூழலியல் கண்காணிப்பகங்கள் –

பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் நீண்ட கால சூழலியல் பாதிப்புகளை மதிப்பிட, நீண்ட கால சூழலியல் கண்காணிப்பகங்கள் , மத்திய சுற்றுச்சூழல் துறை சார்பில் இந்தியா முழுவதும் 8 இடங்களில் அமைக்கப்படவுள்ளன.

07) Oil and Natural Gas Corporation ( ONGC )

08) மனோஜ் பிரபாகர்

09) ஸ்வாதி மலிவால்

10) நார்வே

11) ஹூண்டாய் கார் நிறுவனம் ., Safe Move Traffic Safety Campaign

12) HSBC & ராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாந்து

13) ராஜாளி , அரக்கோணம்

14) பாங்காங்க்

15) சீனா

16) உத்திர பிரதேசம்

17) டிசம்பர் 2015ல் மேற்கு வங்காளம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதற்கு முன் ஆகஸ்ட் 2015ல் அஸ்ஸாம் மாநிலமும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

18) பிரான்ஸ் அதிபர் பிரான்ஸிஸ் ஹாலோண்டி

19) ரேவா கேத்ரபால்

20) ராதா கிருஷ்ண மாத்தூர்

21) 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ….. ( 1 பில்லியன் – 100 கோடி )

22) பிராங்க் இஸ்லாம்

23) மேகாலயா

24) சிக்கிம்

25) ஓய்வு பெற்ற பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி L. நரசிம்ம ரெட்டி

26) டெல்லி – சப்தர்ஜங் மருத்துவமனை

27) Legends of Indian Silver Screen

28) Ahmed Kathrada — கேப் டவுன் ( தென்னாப்பிரிக்கா )

29) Roberto Azevedo ( பிரேசில் நாட்டை சேர்ந்தவர் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Get Alert

    Enter your email address:

  • Categories

  • Twitter

Subscribe Now!
Sign-up for our email newsletter and get free job alerts, current affairs and GK updates regularly.

Subscribe Here

Popup Dialog Box Powered By : XYZScripts.com
  • RSS
  • Facebook
  • Google+
  • Twitter